உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.10 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு

ரூ.10 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு

தேனி:தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வி 38, என்பவரிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த கருவேல்நாயக்கன்பட்டி ஞானசேகரன், மனைவி ஜெயலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செல்வி அதே பகுதியில் ஆடை தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார்.அவருடன் ஞானசேகரன், மனைவி ஜெயலட்சுமி பல ஆண்டுகளாக பழகி வந்தனர். இந்நிலையில் 2024 பிப்.,ல் சொத்து வாங்க பணம் குறைவாக உள்ளது.பணம் வழங்கினால் இரு மாதத்தில் திருப்பி தருவதாக செல்வியிடம் ரூ.10 லட்சத்தை தம்பதி பெற்றனர். பணத்தை திரும்பி தராமல் காலம் தாழ்த்தினர். செல்வி கேட்ட போது திருப்பி தர முடியாது எனக் கூறினர். இந்நிலையில் 2025 ஜூன் 2ல் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்குள் ஞானசேகரன், ஜெயலட்சுமி சென்றுசெல்வியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். ரூ. 10 லட்சத்தை மோசடி செய்ததாக செல்வி , தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் ஞானசேகரன், ஜெயலட்சுமி மீது அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ