தி.மு.க., நகராட்சி தலைவர் கணவர் மீது வழக்கு
தேனி:அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தி.மு.க., நகர வடக்கு பொறுப்பாளரும், தேனி நகராட்சி தலைவரின் கணவருமான பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேனி அல்லிநகரம் அவ்வையார் தெரு ராமசாமி 52. நகராட்சி ஆர்.ஐ.,ஆக உள்ளார். இவர் தேனி இன்ஸ்பெக்டர் ராமலட்சுமியிடம் அளித்த புகாரில் ஜூன் 24ல் அரசுபணி செய்து கொண்டிருந்தேன். நகராட்சி தலைவர் ரேணுப்பிரியாவின் கணவர் பாலமுருகன் அலைபேசியில் அழைத்தார். அங்கு சென்ற என்னை, காமராஜர் நினைவு பஸ் ஸ்டாண்டில் உள்ள டூவீலர் காப்பகத்தை அகற்ற தீர்மானம் நிறைவேற்றியும் ஏன் எடுக்கவில்லை,' எனக்கேட்டார். அதற்கு நான் '2 முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்' என்றேன். என்னை திட்டி, ஜாதியை கூறி இழிவாக பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இருந்தார். இதையடுத்து பாலமுருகன் மீது எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் தேனி டி.எஸ்.பி., தேவராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆர்.ஐ., ராமசாமி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாலமுருகனும் போலீசில் புகார் செய்துள்ளனர்.