உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுவனுக்கு பாலியல் கொடுமை மதரசா நிர்வாகி மீது வழக்கு

சிறுவனுக்கு பாலியல் கொடுமை மதரசா நிர்வாகி மீது வழக்கு

தேனி,:தேனியைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதியின் 14 வயது மகன், வேறொரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்; மதரசாவில் தங்கி உள்ளார். 2024 நவ., 19ல் மாணவரை, 17 வயது இளைஞர் மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து மதரசாவின் தலைமை நிர்வாகி பாரூக்கிடம், அந்த மாணவர் புகார் தெரிவித்தார். ஆனால் நடவடிக்கை இல்லை.பின், 2025 ஜன., 1ல் துாங்கிக் கொண்டிருந்த மாணவனை, மற்றொரு 14 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்தார். அதிக வலி ஏற்பட்டு, அதிகாலை 2:00 மணிக்கு நிர்வாகி சர்புதீனிடம், பெற்றோரிடம் போக வேண்டும் என அந்த மாணவர் கூறினார். ஆனால், நிர்வாகி மறுத்தார். பின், ஜன., 2 காலையில் தன் வீட்டிற்குச் சென்ற சிறுவன், கடும் வலி இருப்பதாக பெற்றோரிடம் கூறினார்.தேனி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு, அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது வரை மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் புகாரில், தேனி மகளிர் போலீசார், அந்த 17, 14 வயதினர் மற்றும் மதரசா தலைமை நிர்வாகி பாரூக், 55, நிர்வாகி சர்புதீன், 45, ஆகிய நால்வர் மீது போக்சோ வழக்குப்பதிந்து, மூன்று பேரை கைது செய்தனர்; பாரூக்கை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி