மேலும் செய்திகள்
பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை
25-Jul-2025
தேனி : தேனியில் ஏலச்சீட்டு நடத்தி பெண் உட்பட 6 பேரிடம் ரூ.14.15 லட்சம் மோசடி செய்தவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். தேனி பழைய ஜி.ஹெச்., ரோடு சிங்கப்பூர் லைன் வனிதாராணி 38. இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் சீட்டு கம்பெனி நடத்துவதாகவும் ரூ.ஒரு லட்சம் கொடுத்தால், ரூ.1.10 லட்சம் தருவதாகவும் கூறினார். அதனை நம்பிய வனிதாராணி 4 சீட்டுத்திட்டங்களில் சேர்ந்து ரூ.2.20 லட்சம் செலுத்தினார். இவர் உட்பட 6 பேரது சீட்டுப்பணம் ரூ.11 லட்சத்து 95 ஆயிரத்து 100 சேர்த்து மொத்தம் ரூ.14 லட்சத்து 15 ஆயிரத்து 100 வரை வசூலித்து வெங்கடேசன் மோசடி செய்தார். இதுகுறித்து வனிதாராணி தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்படி வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Jul-2025