உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இருதரப்பு மோதல் ஒன்பது பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் ஒன்பது பேர் மீது வழக்கு

கடமலைக்குண்டு : எரதிமக்காள்பட்டி மாயாண்டி 64. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமிக்கும் 52, அப்பகுதியில் உள்ள கருப்பசாமி கோயிலில் சாமி கும்பிடுவதில் பிரச்னை இருந்தது. சில நாட்களுக்கு முன் இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக கோயிலில் சாமி கும்பிட சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மாயாண்டி, கருப்பசாமி இருவரும் காயம் அடைந்தனர். மாயாண்டி புகாரில் கண்டமனுார் போலீசார் எரதிமக்காள்பட்டியை சேர்ந்த கருப்பசாமி, ராமகிருஷ்ணன், முருகன், கவியரசன் ஆகியோர் மீதும், கருப்பசாமி புகாரில் மாயாண்டி, செல்வகுமார், ராமச்சந்திரன், மாரியப்பன், ராமன் ஆகியோர் உட்பட 9 பேர் மீதும் கண்டமனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ