உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மிரட்டியவர் மீது வழக்கு

மிரட்டியவர் மீது வழக்கு

தேனி: அல்லிநகரம் நேருஜீ ரோடு வாசு 59. இவர் குடும்ப பூர்வீக சொத்தினை விற்பனை செய்ததில் பங்குத்தொகை தரவில்லை என இவரது சகோதரர் நாகராஜூவிடம் பத்திரபதிவு அலுவலகம் அருகே கேட்டார். நாகராஜூ, வாசுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். வாசு புகாரில் நாகராஜூ மீது வழக்கு பதிந்து தேனி போலீசார் விசாரிக்கின்றனர். முதாட்டியை அச்சுறுத்தியவர்கள் மீது வழக்குதேனி: மாரியம்மன் கோவில்பட்டி கவுதம், மணிவண்ணன் இவர்களுக்கு எதிரான வழக்கில் அதே பகுதியை சேர்ந்த தலபாண்டியன், அவரது தாயார் பாண்டியம்மாள் ஆகியோருக்கு சம்மன் வந்துள்ளது. இந்நிலையில் பாண்டியம்மாள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த கவுதம், மணிவண்ணன் இருவரும் டூவீலரை ஏற்றுவது போல் வந்து அச்சுறுத்தினர். தலபாண்டியன் ஆன்லைனில் போலீஸ் புகார் அளித்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை