உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியவர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு

முதியவர் மீது தாக்குதல் மூவர் மீது வழக்கு

உத்தமபாளையம்: க.புதுப்பட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் ராஜசேகர் 41, இவரது தந்தை ராயப்பன் 62, தாயார்மேரி 59. ராஜசேகர் மனைவி கோபித்துக் கொண்டு சென்றார். இதற்கு அதே தெருவில் வசிக்கும் உதயசூரியன் 60 என்பவர் தான் காரணம் எனக் கூறி மூவரும் சேர்ந்து உதயசூரியனை அடித்து உதைத்துள்ளனர். இதில் உதய சூரியன் காயம் அடைந்தார். உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். உத்தமபாளையம் போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை