உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐபோன் வாங்கித் தருவதாக  ரூ.9.53 லட்சம் மோசடி திருச்சி நபர் மீது வழக்கு

ஐபோன் வாங்கித் தருவதாக  ரூ.9.53 லட்சம் மோசடி திருச்சி நபர் மீது வழக்கு

தேனி,:தேனியில் நிதி நிறுவன உரிமையாளரிடம் வெளிநாட்டு ஐபோன் வாங்கித் தருவதாக கூறிரூ.9.53 லட்சம் மோசடி செய்த திருச்சி கிராப்பட்டி முகமதுஷான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தேனி அருகே பழனிசெட்டிபட்டி தெற்குத்தெரு ஜெயசந்திரன் 38. இவர் தேனி, ஆண்டிட்டி, சின்னமனுார், போடி, கம்பம் பகுதிகளில் நிதி நிறுவனம் நடத்துகிறார். இவரது நண்பர் விக்னேஷ் மூலம் திருச்சி கிராப்பட்டி முகமதுஷானின் அறிமுகம் கிடைத்தது. முகமதுஷான், 'வெளிநாட்டு அலைபேசிகள் வாங்கி விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும்' என்றார். இதை நம்பிய ஜெயச்சந்திரன் 2024 ஏப்.1 முதல் ஏப். 30 வரை பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.9 லட்சத்து 53 ஆயிரத்து 500 ஐ அவருக்கு அனுப்பி உள்ளார். அதன்பின் முகமதுஷான் , ஐபோன் வாங்கித்தராமல் காலம் தாழ்த்தினார். அலைபேசிகளை கேட்ட, பேசுவதையும் அவர் தவிர்த்தார். 2025 ஏப். 24ல் நண்பர் விக்னேஷ் மூலம் தொடர்பு கொண்ட போது, ஜெயச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அவர் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். முகமதுஷான் மீது எஸ்.ஐ., கண்ணன் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ