நிறுவனத்தில் ரூ.16.05 லட்சம் மோசடி: பணியாளர்கள் இருவர் மீது வழக்கு
தேனி: தேனி மாவட்டம் கம்பம் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் தவணைத்தொகை ரூ.16.05 லட்சத்தை கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்த களப்பணியாளர்கள் சம்பத்குமார், பிரவீனா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கம்பம் அமராவதி தியேட்டர் எதிர் தெரு கோபி 30. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவன மேலாளராக உள்ளார். இங்கு மேகமலையை சேர்ந்த சம்பத்குமார் 34, கேரளா இடுக்கி மாவட்டம் பிரவீனா 29, ஆகியோர் களப்பணியாளர்களாக இருந்தனர். இவர்கள் வாடிக்கையாளர்கள் 238 பேர் தாங்கள் வாங்கிய கடனுக்கு மாதந்தோறும் தவணைத் தொகை செலுத்தினர். சமீபத்தில் மேலாளர் வங்கியின் வரவு, செலவுகளை ஆய்வு செய்தார். அதில் 238 வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு செலுத்திய ரூ.16 லட்சத்து 5 ஆயிரத்து 366 ஐ களப்பணியாளர்கள் இருவரும் கையாடல் செய்தது தெரிந்தது. இதனை திருப்பி செலுத்த கூறியபோது மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மேலாளர், தேனி எஸ்.பி., சினேஹாபிரியாவிடம் புகார் அளித்தார். சம்பத்குமார், பிரவீனா மீதுமாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையிலான போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளார்.