உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டபுள் டெக்கர் பஸ் விபத்து கார் டிரைவர் மீது வழக்கு பதிவு

டபுள் டெக்கர் பஸ் விபத்து கார் டிரைவர் மீது வழக்கு பதிவு

மூணாறு: ' டபுள் டெக்கர்' பஸ் விபத்தில் சிக்க காரணமான கார் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மூணாறின் இயற்கை அழகை பஸ்சில் பயணித்தவாறு ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ' டபுள் டெக்கர்' பஸ் சேவை பிப்.8ல் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த பஸ் முற்றிலும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பழைய மூணாறில் உள்ள கேரள அரசு பஸ் டிப்போவில் இருந்து தினமும் மூன்று முறை பஸ் இயக்கப்படுகிறது. மூணாறில் இருந்து கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆனயிரங்கல் அணையின் 'வியூ பாய்ண்ட்' வரை சென்று திரும்பும். நேற்று முன்தினம் 12:30 மணிக்கு டிப்போவில் இருந்த 45 சுற்றுலா பயணிகளுடன் சென்ற பஸ் ஆனயிரங்கல் வியூ பாய்ண்ட் சென்று விட்டு திரும்புகையில், மூணாறு அருகே தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில் விபத்தில் சிக்கியது. பயணிகள் காயம் இன்றி தப்பினர். எதிரில் தவறாக வந்த கார் மீது மோதி விடாமல் தவிர்க்க டிரைவர் பஸ்சை திருப்பியபோது விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது. வழக்கு பதிவு: தேவிகுளம் போலீசார் பஸ் விபத்தில் சிக்க காரணமான கார் பற்றி விசாரித்தனர். விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள சுங்கச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் காரை அடையாளம் கண்டனர். அதனை ஓட்டிச் சென்ற அடிமாலியைச் சேர்ந்த முகம்மதுபரீத் மீது அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ