சி.இ.ஓ., ஆலோசனை
தேனி: தேனி முத்துத்தேவன்பட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு, உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., நாகேந்திரன் தலைமை வகித்தார். அதில் பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சி.இ.ஓ., அறிறுத்தியதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர். கூட்டத்தை சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் சீனிவாசன், பெருமாள்சாமி ஒருங்கிணைத்தனர்.