கள்ளர் பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு
தேனி: மார்க்கையன்கோட்டை அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு கூட்டத்தில் சி.இ.ஓ., இந்திராணி,டி.இ.ஓ., வசந்தா பங்கேற்று, ஆவணங்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளியின் வகுப்பறைகள், கழிப்பறை, மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு, குடிநீர் வசதி, பள்ளியின் பாதுகாப்பு அம்சங்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராகவன்,ஆசிரியர்கள் உடனிருந்தனர்.