குழந்தை பராமரிப்பு இல்லங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி: சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் பராமரிப்பில் திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் குழந்தைகள் தினத்தில் வழங்கப்பட உள்ளது. அரசின் கீழ் இயங்கும் சிறந்த குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரண்பட்டதாக கருதப்படும் சிறார்களுக்கான குழந்தைகள் இல்லங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய 4 பிரிவுகளில் தலா ரூ. 10ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளது. விருது பெற விண்ணப்பிக்கும் குழந்தைகள் இல்லங்கள் உரிய பதிவு சான்றிதழ்கள், சேவைகள் செய்திருக்க வேண்டும். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி இருக்க வேண்டும், குற்றவியல் வழக்கு இருக்க கூடாது. முழு கருத்துருவினை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் அல்லது தபால் மூலம் ஆக.,5 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.