| ADDED : நவ 15, 2025 04:57 AM
தேனி: மாநில குழந்தைகள் நலன்,சிறப்பு சேவைகள் துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், நேற்று குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான கையெழுத்து இயக்கம்,விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தேனி பங்களாமேட்டில் துவங்கிய ஊர்வலத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார். முன்னதாக குழந்தைகள் கலெக்டருக்கு ரோஜாப்பூ வழங்கினர். சி.இ.ஓ., நாகேந்திரன், ஏ.டி.எஸ்.பி.,க்கள் கலைக்கதிவரன்,ஜெரால்டு அலெக்ஸ்சாண்டர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் வனஜா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மாரிமுத்து பங்கேற்றனர். ஊர்வலம் பங்களாமேட்டில் துவங்கி பழைய பஸ் ஸ்டாண்ட் நேருசிலை சென்று மீண்டும் பங்களாமேட்டில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் தேனி,வீரபாண்டி ஐ.டி.ஐ., கம்மவார் சங்கம் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மதுரை கருமாத்துார் 'வேர்வை' கலைக்குழு வீதிநாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.