உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குழந்தைகள் தின விழா

 குழந்தைகள் தின விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமையில் நடந்தது. பள்ளி முதல்வர்கள் உமாமகேஸ்வரி, லதா வாழ்த்தினர். பள்ளி செயலாளர் மாத்யூ ஜோயல், நிர்வாகி தமயந்தி ஆகியோர் குழந்தைகள் தின விழா சிறப்பு குறித்து பேசினர். மாணவர்கள் ஜவஹர்லால் நேரு குறித்து பேசி, அவரின் செயல்முறை படைப்புகளை கண்காட்சியாக வைத்தனர். மாணவர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, பானுப்பிரியா, தமிழ்ச்செல்வி, திவ்யா, தெய்வ நிரஞ்சனா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ