உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செடி,கொடிகள் ஆக்கிரமிப்பால் பயன்இன்றி முடங்கிய சிறுவர்பூங்கா திருடுபோன விளையாட்டு உபகரணங்கள்

செடி,கொடிகள் ஆக்கிரமிப்பால் பயன்இன்றி முடங்கிய சிறுவர்பூங்கா திருடுபோன விளையாட்டு உபகரணங்கள்

போடி: போடி அம்மாகுளத்தில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்கா செடி,கொடிகளின் ஆக்கிரமிப்பால் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது.போடி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாகுளத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.17 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா கட்டி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். பூங்காவில் குழந்தைகள் விளையாடும் வகையில் ஜம்பிங் கூடாரம், காளை மாடு ராட்டினம், ஊஞ்சல், உடற்பயிற்சி சாதனங்கள், பெரியவர்கள் அமர இருக்கைகள், அலங்கார விளக்குகள், அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவிற்கு விளையாட வரும் சிறுவர்களிடம் கட்டணமாக நகராட்சி மூலம் ஒரு நபருக்கு ரூ.10 வீதம் தினமும் வசூலானது.அதன் பின் நகராட்சி பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் திருடுபோனது. பயன்பாடு குறைந்ததால் பூங்கா முழுவதும் செடிகள் ஆக்கிரமிப்பு, குப்பை தேக்கமாக உள்ளது. இரவில் சமூக விரோத கூடாரமாக விளங்கி வருகிறது. நகராட்சிக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது. பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை