மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
26-Dec-2025
பெரியகுளம்: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள சர்ச்சில் சிறப்பு திருப்பலி நடந்தது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பெரியகுளம் தென்கரை புனித அமல அன்னை சர்ச்சில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு திருப்பலி பூஜையை தொடர்ந்து பாதிரியார் பீட்டர் சகாயராஜ் நற்கருணை ஆசீர்வாதம் வழங்கினார். வடகரை கோட்டைமேடு சிஎஸ்ஐ சர்ச்சில் திருப்பலி பூஜைகளை பாதிரியார் ஸ்டாலின் பிரபாகரன் செய்திருந்தார். பெரியகுளம் தாலுகா பகுதிகளில் ஏராளமான தேவாலயங்களில் திருப்பலி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தேனி: மதுரை ரோடு பங்களாமேடு உலக மீட்பர் சர்சில் நள்ளிரவு, காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தேனி நகர் பகுதி, அரண்மனைப்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்துவர்கள் திருப்பலியில் பங்கேற்றனர். பாதிரியார்கள் முத்து, திருத்துவராஜ் திருப்பலி நடத்தினர். என்.ஆர்.டி.,நகர், அரப்படிதேவன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ., சர்ச்களில் பாதிரியார் அஜீத் ஸ்டேன்லி சிறப்பு ஆராதனை கூட்டம் நடத்தினார். ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். பங்கேற்றவர் களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். சர்ச்களில் திருப்பலி கம்பம்: ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச்சில் நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்துவர்கள் திரளாக பங்கேற்றனர். ஆங்கில புத்தாண்டை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஆங்கில புத்தாண்டை அறிவிக்கும் விதமாக இந்த சர்ச்சில் உள்ள பெரிய வெண்கல மணி அதிகாலை 12:00 மணிக்கு ஒலிக்கப்பட்டது. கம்பம், உத்தமபாளையத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட சர்ச்சுகளில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. போடி: பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள புனித ஆரோக்கிய அன்னை சர்ச்சில் உலக அமைதி வேண்டி பாதிரியார் அருண் பவியான் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சி.எஸ்.ஐ., சர்ச்சிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
26-Dec-2025