கார் மோதி துாய்மை பணியாளர் காயம்
தேனி: அல்லிநகரம் காந்திநகர் சின்னகாளை 42, நகராட்சி துாய்மைப்பணியாளராக பணிபுரிகிறார். இவர் நகராட்சி குப்பை அகற்ற பயன்படுத்தும் மூன்றுசக்கர பேட்டரி வாகனத்தை சந்தை கேட் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். ரோட்டை கடக்க முயற்சித்தார். அப்போது பெரியகுளம் லட்சுமிபுரம் சூர்யா 23, ஓட்டிவந்த கார் மோதியது. இதில் சின்னகாளை காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவரது புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.