உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் மேக மூட்டம்

மூணாறில் மேக மூட்டம்

மூணாறு: மூணாறில் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அதீத மேக மூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. இடுக்கி மாவட்டத்திற்கு ஆக.4ல் அதிதீவிர மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்ப மழை பெய்யவில்லை. அதன் பிறகு மழை குறைந்தது. 2 நாட்களாக சாரல் மழை பெய்த நிலையில், அவ்வப்போது மழை மேகங்கள் சூழ்ந்தவாறுஉள்ளன. கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் கடும் மேக மூட்டம் காணப்பட்டது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை