உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோஆப்டெக்சில் ரூ.95 லட்சத்திற்கு தீபாவளி விற்பனை செய்ய இலக்கு

கோஆப்டெக்சில் ரூ.95 லட்சத்திற்கு தீபாவளி விற்பனை செய்ய இலக்கு

தேனி: தேனி, பெரியகுளம் கோஆப்டெக்ஸ்விற்பனையகங்களின் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.95 லட்சம் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக கோஆப் டெக்ஸ்சில் பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி உள்ளது. இதனை பொது மக்கள் பயன் பெறும் வகையில் தேனி கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனையை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தேனிக்கு ரூ.70 லட்சம், பெரியகுளம் விற்பனை இலக்காக ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.95 லட்சம் தீபாவளி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விழாவில் கோஆப்டெக்ஸ் மதுரை மண்டல துணை மேலாளர் தீபா, உற்பத்தி, பராமரிப்புப் பிரிவு மேலாளர் கனிச்செல்வி, மேலாளர் வரதராஜன் முன்னிலை வகித்தனர். மேலாளர் வரதராஜன் கூறுகையில், WWW.Cooptex.gov.inஎன்ற இணையதளத்தின் மூலமும் வாடிக்கையாளர்கள் ஆடை ரகங்களை வாங்கி பயன் பெறலாம். கோஆப்டெக்ஸின் மாதாந்திர சேமிப்பு திட்டத்திலும் சேர்ந்து பயன் பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !