உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உழவர் சந்தையில் குப்பை தொட்டி வைக்க கலெக்டர் அறிவுறுத்தல்

உழவர் சந்தையில் குப்பை தொட்டி வைக்க கலெக்டர் அறிவுறுத்தல்

தேனி: தேனி உழவர்சந்தையில் குப்பை தொட்டி வைக்க நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தினார்.தேனி தாலுகாவில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடந்தது. தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி முன்னிலை வகித்தார். தாசில்தார் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கலெக்டர் மாவட்ட பொது நுாலகத்தில் ஆய்வு செய்தனர். அங்கு அதிக புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது பற்றி கலெக்டர் கேள்வி எழுப்பினார். கிளை நுாலகங்களுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைந்து அனுப்பி தகவல் தெரிவிக்க கூறினார். பின் உழவர்சந்தையில் வியாபாரிகளிடம் பேசியவாறு, சுவர் இடிந்த பகுதியை ஆய்வு செய்தார். மீறு சமுத்திர கண்மாய் கரையில் ஆய்வு செய்தார். கண்மாய் கரையில் கொட்டி உள்ள குப்பையை ஏன் அகற்றவில்லை. எப்போது அகற்றுவீர்கள் என கேட்டார். இருமாதங்களுக்கு ஒருமுறை அகற்றுகிறோம். உழவர்சந்தை குப்பையை இங்கே கொட்டுகின்றனர் என கமிஷனர் கமிஷனர் ஏகராஜ் பதில் அளித்தார். அப்படி என்றால் உழவர்சந்தை பகுதிக்குள் குப்பை தொட்டி வையுங்கள் என்றார். தேனி நகராட்சி குப்பை தொட்டி இல்லாத நகராட்சி என கமிஷனரின் பதிலை கேட்டு அப்படியானால் உழவர்சந்தை உட்பகுதியில் குப்பை தொட்டி வையுங்கள் என்றார்.பின்னர் பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில்ஆய்வு செய்து மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். மாலையில் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ