உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளி அருகே புகையிலை விற்றால் கடைக்கு சீல் : கலெக்டர் உத்தரவு

பள்ளி அருகே புகையிலை விற்றால் கடைக்கு சீல் : கலெக்டர் உத்தரவு

தேனி : பள்ளிகளுக்கு அருகே புகையிலை விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்து, சீல் வைக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., சினேஹாபிரியா, மதுரை மண்டல மதுவிலக்கு எஸ்.பி.,சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசுகையில், 'பள்ளிகளுக்கு அருகே புகையிலை விற்கும் கடைகளின் உரிமத்ததை ரத்து செய்து சீல் வைக்க வேண்டும். கஞ்சா விற்பனையை தடுக்கும்செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றார். மாவட்டத்தில் 2025 ஜன., முதல் ஜூலை வரை 255 கிலோ கஞ்சா, 163 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு இவ்வழக்குகளில் 271 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிலை விற்பனை செய்த 296 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ. 75 லட்சம் அபராதம் விதித்து சுமார் 2 டன் புகையிலை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய 305 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் முத்துலட்சுமி, உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சசிதீபா, மதுவிலக்கு டி.எஸ்.பி., சீராளன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை