மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
12-Aug-2025
தேனி: மாலத்தீவிற்கு வேலை சென்று அங்கு மின்சாரம் தாக்கி உயிரிழந்த, தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, சில்வார்பட்டியை சேர்ந்த கருப்பையா 40, என்பவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர். சில்வார்பட்டி ஆசாரித்தெரு கருப்பையா. இவரது மனைவி அர்ச்சனா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளன. கருப்பையா 6 ஆண்டுகளாக மாலத்தீவில் பிளம்பராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் கருப்பையா பணிபுரிந்த போது மின்சாரம் தாக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினருக்கு அலைபேசியில் தகவல் தெரிவித் துள்ளனர். இந்நிலையில் அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருப்பையாவின் தந்தை முத்துகாமாட்சி உள்ளிட்டோர் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்த னர். கலெக்டர் உத்தரவில் மனுவினை சென்னையில் உள்ள அயல்நாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
12-Aug-2025