| ADDED : ஜன 08, 2024 04:51 AM
கம்பம் : மாவட்டத்திற்கு 4.70 லட்சம் செங்கரும்புகள் வாங்க விவசாயிகளின் பட்டியலை உடனடியாக அனுப்பி வைக்குமாறு வேளாண் துறைக்கு தேனி கலெக்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு செங்கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.மாவட்டத்தில் சின்னமனுாரில் 2.30 லட்சம், பெரியகுளத்தில் 2.20 லட்சம், தேனி 20 ஆயிரம் செங்கரும்புகள் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 106 ஏக்கரில் மட்டுமே செங்கரும்பு சாகுபடியாகிறது.ஒரு கரும்பின் கொள்முதல் விலை ரூ.33 என அரசு நிர்ணயித்துள்ளது. வெட்டு கூலி, ஏற்றி இறக்கும் கூலி அதில் அடங்கும். கடந்தாண்டு வேளாண் துறை மூலம் செங்கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் பட்டியலை உடனே அனுப்பி வைக்குமாறு வேளாண் உதவி இயக்குனர்களுக்கு கலெக்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.