மேலும் செய்திகள்
பாம்பு கடித்து பெண் பலி
29-Sep-2026
பெரியகுளம்: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பட்டத்திக்காடைச் சேர்ந்த பழனிவேல் 53, மகள் சுருதிகா 20. இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேது பாஸ்கரா கல்லூரியில் பி.எஸ்.சி., வேளாண்மை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சக மாணவிகள் 6 பேருடன் பெரியகுளம் தென்கரை போடி அரண்மனை சந்து திலகம் வீட்டில் கடந்த மாதம் முதல் தங்கி விவசாய நிலங்களில் வேளாண்மை செய்முறை பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அக்., 7ல் உடல்நலம் சரியின்றி வாந்தி எடுத்த சுருதிகா வீட்டில் மயங்கி விழுந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் பழனிவேல் மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுருதிகா உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
29-Sep-2026