மேலும் செய்திகள்
கம்பம் பள்ளி மாணவர் மர்ம காய்ச்சலால் இறப்பு
27-Nov-2024
கம்பம்: கம்பம் பைபாஸ்ரோட்டில் முன்னாள் சென்ற லாரி எச்சரிக்கை செய்யாமல் திடீரென திரும்பியதால் பின்னால் வந்த டூ வீலர் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.கம்பமெட்டு காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஆரிப் (19). இவர் மதுரை கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நேற்று காலை தனது நண்பர் முகமது தாஹா 19 வுடன் கிரிக்கெட் விளையாடி விட்டு திரும்பினார்கள். கம்பம் பைபாஸ் சாலையில் இருவரும் டூவீலரில் சென்ற போது, முன்னாள் சென்ற லாரி எச்சரிக்கை ஏதும் செய்யாமல் திடீரென திரும்பியதால், டூவீலர் லாரி மீது மோதியது. இதில் டூவீலரில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இவ் விபத்தில் ஆரிப் பலியானார். முகமது தாஹா தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Nov-2024