மேலும் செய்திகள்
மனநோயாளி தற்கொலை
10-Sep-2025
உத்தமபாளையம் : தேனி மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டிகளில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவி கீர்த்தனா தேவி முதலிடம் பெற்றார். மாவட்ட கல்லூரிகளுக்கு இடையேயான மாரத்தான் போட்டி தேனியில் நடந்தது. சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எயிட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு நடந்த போட்டியை நடத்தியது. இதில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவி கீர்த்தனா தேவி முதலிடம் பெற்றார். இவர் சேலத்தில் நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் கம்பத்தில் நடந்தது. இதில் போட்டியில் இக்கல்லூரி மாணவர் சஞ்சித் கண்ணா 500 மீட்டர் ஸ்கேட்டிங் வளைய நிகழ்வு, லேப் ஸ்கேட்டிங் சாலை நிகழ்வு மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஸ்கேட்டிங் சாலை போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான், முதல்வர் எச். முகமது மீரான் பாராட்டி பரிசு வழங்கினர். பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி கவுரவிக்கப்பட்டார்.
10-Sep-2025