மேலும் செய்திகள்
பள்ளிகளில் பொங்கல் விழா; மாணவர்கள் உற்சாகம்
15-Jan-2025
கம்பம்: ஜார்கண்ட் மாநிலம்,ராஞ்சியில் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கம்பம் எம்.பி.எம்., மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் தாரனேஷ் பங்கேற்று குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், வட்டு எறிதலில் வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்தார். ஊர் திரும்பிய மாணவரை பல்வேறு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஊர்வலத்திற்கு பள்ளி செயலர் மகுட காந்தன் தலைமை வகித்தார். நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் காந்த வாசன் முன்னிலை வகித்தார். டாக்டர் மோகன சுந்தரம் வரவேற்றார். ஊர்வலத்தை எம்.பி., தங்க தமிழ்செல்வன் எம்.பி. துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் நிறைவு செய்து மாணவரை பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார். பள்ளி செயலர் ரூ.50 ஆயிரம், மாணவர்கள் குழு சார்பில் ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கினர். பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ் பாபு,பிரதீப் கவுரவிக்கப்பட்டனர்.நகராட்சி தலைவர் வனிதா, முன்னாள் நகராட்சி தலைவர் பாஸ்கரன், வழக்கறிஞர் நெப்போலியன் , சி.பி.யூ. மேல்நிலைப் பள்ளி தாளாளர் திருமலை சுதாகரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தொழிலதிபர்கள் அன்பழகன், சோணைமுத்து, டாக்டர் அருள் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள்.
15-Jan-2025