உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க., எம்.பி.,யை கண்டித்து  தேனியில் காங்., ஆர்ப்பாட்டம்

தி.மு.க., எம்.பி.,யை கண்டித்து  தேனியில் காங்., ஆர்ப்பாட்டம்

தேனி: முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் சிவா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தேனி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சம்சுதீன் வரவேற்றார்.மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணை தலைவர் சன்னாசி, கிராம மறுசீரமைப்புப் பிரிவு போடி பகுதி தலைவர் சதாசிவம், வழக்கறிஞர் பிரிவு தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். தி.மு.க., துணை பொதுச் செயலாளர் சிவாவிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். நகரத் தலைவர் கோபிநாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை