உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சபரிமலை பக்தர்களுக்கு வசதிகள் இடுக்கி கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சபரிமலை பக்தர்களுக்கு வசதிகள் இடுக்கி கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை

மூணாறு: சபரிமலை பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து இடுக்கியில் கலெக்டர் விக்னேஸ்வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.எஸ்.பி., விஷ்ணுபிரதீப், சப் கலெக்டர் அனுப்கார்க், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இடுக்கி மாவட்டத்தில் பக்தர்கள் கடந்து செல்லும் பகுதிகளில் தேவையான இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். ரோடுகளில் மோட்டார் வாகனத்துறை சார்பில் முன் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட வேண்டும். ஓட்டல்களில் வெளிப்படையாக விலை பட்டியலை வைக்க வேண்டும். அதிக விலை வசூலிப்பதை உணவு பாதுகாப்பு துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். ரோடுகளில் மின் விளக்குகள் வசதியை மின்வாரியத்தினர் உறுதி செய்ய வேண்டும். அதேபோல் ரோடுகள் சீரமைப்பு, காடுகளை வெட்டுதல், முன் அறிவிப்பு போர்டுகள் வைத்தல் ஆகியவற்றை குறிப்பிட்ட கால அளவில் பொது பணித்துறையினர் செய்ய வேண்டும்.முக்குழி, சத்திரம், புல்மேடு பகுதிகளில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் மருத்துவ முகாம், வண்டிப் பெரியாறு, குமுளி, பீர்மேடு ஆகிய சுகாதார மையங்களில் 24 மணி நேரமும் மருத்துவ அதிகாரி சேவை, பீர்மேடு தாலுகா மருத்துவமனையில் விஷக்கடி தொடர்பான மருந்துகள் 24 மணி நேரம் கிடைப்பது ஆகியவற்றை மாவட்ட மருத்துவ அதிகாரி உறுதிபடுத்த வேண்டும்.மஞ்சுமலை வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். குமுளி நகரில் சிறப்பு திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு போலீசார் தீர்வு காண வேண்டும் என இதில் முடிவு எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை