உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனவிலங்குகள் தாகம் தீர்க்க உதவிய தொடர் மழை: வனத்துறை நிம்மதி

வனவிலங்குகள் தாகம் தீர்க்க உதவிய தொடர் மழை: வனத்துறை நிம்மதி

போடி: போடி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வன விலங்குகளுக்கு தாகம் தீர்க்க வழி பிறந்தது என வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.போடிமெட்டு, மதிகெட்டான் சோலை மலைப்பகுதி உள்ளது. போடிமெட்டு, புலியூத்து, குரங்கணி, தாவலம், வலசத்துரை, பிச்சாங்கரை, மேலப்பரவு, மரக்காமலை மேல்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வனப்பகுதி அமைந்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் வரை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். அப்போது சமூக விரோத கும்பல், கரிமூட்டம் போடும் நபர்கள், கால்நடை மேய்ப்பவர்கள் தீ வைத்து வருவது வழக்கம்.வன விலங்குகளால் மனிதர்கள் பலியாயினர்.கடந்த சில நாட்களாக கேரளா, போடி, குரங்கணி, கொட்டகுடி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தொடர் மழையால் வனப் பகுதியில் உள்ள சுனைகளில் நீர் தேங்கி வனப்பகுதி பசுமையாக மாறி உள்ளன.இதனால் தீ வைப்பு சம்பவம் இல்லாமல் வன விலங்குகளின் தாகம் தீர்க்க தொடர் மழை பயன்பட்டு உள்ளது என வனத்துறையினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை