உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மேகமலையில் தொடர் மழை மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

மேகமலையில் தொடர் மழை மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்

கம்பம்: மேகமலையில் மழை வெளுத்து வாங்குவதால் அணைகள் நிரம்பியதால் வண்ணாத்தி பாறை சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தியை வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறதுதென்மேற்கு பருவ மழை கம்பம் பள்ளத்தாக்கில் இரவும் பகலாக விட்டு விட்டு சாரல் பெய்து வருகிறது.மேகமலை பகுதியில் தொடர்ந்து இரவு, பகலாக மழை வெளுத்து வாங்குகிறது.இதனால் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு , இரவங்கலாறு அணைகளில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. அணைகளில் நீர் மட்டம் உயர்வதால், தண்ணீர் வீணாக வாய்ப்புள்ளது. தண்ணீர் வீணாகாமல் பயன்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.பராமரிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, 20 முதல் 35 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெய்து வரும் மழையால் கிடைக்கும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

மரங்கள் விழுந்து வருகின்றன

பருவ மழை முழுவீச்சில் பெய்வதால் காற்றும் பலமாக வீசி மரங்கள் சாய்ந்து வருகிறது. கடானா எஸ்டேட் அருகில் பெரிய மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் மரத்தை அகற்றினார்கள். ஆங்காங்கே மரக் கிளைகள் ஒடிந்து விழுகிறது. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை