உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூட்டுறவு நுாற்பாலை தினக்கூலி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

கூட்டுறவு நுாற்பாலை தினக்கூலி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

ஆண்டிபட்டி : அண்ணா கூட்டுறவு நூற்பாலை தினக்கூலி தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆண்டிபட்டியில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த நூற்பாலையில் 280 தற்காலிக தொழிலாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக பணி செய்கின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய கோர்ட் மூலம் உத்தரவு பெறப்பட்டும் நூற்பாலை நிர்வாகத்தினர் தாமதிக்கின்றனர். இதனை கண்டித்து ஆண்டிபட்டி டாக்சி ஸ்டாண்ட் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமணதாஸ், பொருளாளர் கமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை விளக்கி சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் அசோகன், பொதுத்தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் ராமர் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ