உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி: கலெக்டர் அலுவலகம் முன் சி.ஐ.டி.யு., கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து பொருட்களை சரியான எடையில் அனுப்ப வேண்டும், ரேஷன் வினியோகத்திற்கு தனித்துறை, பொட்டலங்களில் பொருட்கள் வழங்க வேண்டும், சர்வர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், பி.ஓ.எஸ்., இயந்திரத்தை தராசுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். தமிழக கூட்டுறவு சம்மேளன தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராமசந்திரன், சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் செந்தில்காமு, பிச்சைமணி, கருப்பசாமி, சிவம், வீரேஸ்வரன், ராம்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை