உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொப்பரை தேங்காய் கிலோ ரூ.210க்கு ஏலம் 

கொப்பரை தேங்காய் கிலோ ரூ.210க்கு ஏலம் 

தேனி: தேனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்கள் இநாம் முறையில் ஏலம் விடப் படுகிறது. நேற்று கொப்பரை தேங்காய் 350 கிலோ விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கொப்பரை தரத்தினை பொறுத்து அதிகபட்சமாக ரூ.,210 முதல் குறைந்தபட்சமாக ரூ. 90 வரை ஏலம் சென்றது. இந்த ஏலத்தில் 5 வியாபாரிகள் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர். கொப்பரைகள் மொத்தம் ரூ. 51,316க்கு விற்பனையானது. மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்கள் இநாம் முறையில் விற்பனை செய்ய சுக்குவாடன்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நேரில் அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி