வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சில மாதங்கள் முன்பு தான் மிகுந்த கஷ்டம் என்று செய்தி வெளியிட்டீர்கள். இப்போது அவர்கள் துன்பம் எல்லாம் நீங்கி சபிக்ஷம் நிலவப் போவது போல ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள் அடுத்தவர் பொறாமை படும் அளவிற்கு.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்பலாபுரம், லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் இந்த ஆண்டு காட்டன் ரக சேலைகள் உற்பத்தி விற்பனை அதிகரித்துள்ளதால் நெசவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நெசவுத் தொழிலில் நூறு ஆண்டு பாரம்பரியத்தை கொண்ட இப்பகுதியில் ஆரம்ப காலங்களில் கைத்தறிகளில் காட்டன் ரக சேலைகள், வேஷ்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன. சினிமா பாடல்களிலும் சக்கம்பட்டியில் உற்பத்தியாகும் சேலைகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பாடல் வரிகள் அமைந்துள்ளன. கடந்த காலங்களில் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட சேலைகள், வேஷ்டிகள் இலங்கையிலும் விற்பனைக்கு அனுப்பப்பட்டன. நெசவுத் தொழிலில் ஏற்பட்ட நவீன மாற்றத்தால் கைத்தறிகள் குறைந்து விசைத்தறிகள், பெடல் தறிகளில் தற்போது அதிக அளவில் உற்பத்தி நடந்து வருகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் ரக சேலைகள் தற்போது இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் பலரும் சேலைகளை கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் காட்டன் ரக சேலைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு அதிகரித்துள்ளதால் நெசவாளர்கள் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய ரகத்திற்கு வரவேற்பு காட்டன் ரக சேலைகள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் சக்கம்பட்டி, டிசுப்புலாபுரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி, பெடல் தறிகளில் 60,80,100ம் நம்பர் நைஸ் ரக நூல்களில் காட்டன் ரக சேலைகள் பல வண்ணங்களில் உற்பத்தி ஆகிறது. இந்த ஆண்டு தீபாவளி சீசனை முன்னிட்டு செட்டிநாடு காட்டன், காஞ்சி காட்டன், வைர ஊசி கோர்வை, கோர்வை புட்டா, கட்டம் புட்டா, பிளைன் புட்டா ரக சேலைகளுக்கு அமோக வரவேற்பு உள்ளது. இந்த ஆண்டு வெளிமாநிலங்கள் பலவற்றிற்கும் விற்பனைக்கு செல்கிறது. தினமும் இப்பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேலைகள் உற்பத்தி ஆகிறது. தீபாவளி பண்டிகை தேவையால் இன்றளவும் உற்பத்தியாகும் சேலைகள் இருப்பு இன்றி விற்பனையாகிறது. நெசவாளர்களும் ஆர்வத்துடன் வேலை நேரத்தை அதிகரித்துள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் உற்பத்தி விற்பனையில் 20 சதவீதம் அளவு உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் நெசவாளர்கள் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இவ்வாறு கூறினர்.
சில மாதங்கள் முன்பு தான் மிகுந்த கஷ்டம் என்று செய்தி வெளியிட்டீர்கள். இப்போது அவர்கள் துன்பம் எல்லாம் நீங்கி சபிக்ஷம் நிலவப் போவது போல ஓவர் பில்டப் கொடுக்கிறீர்கள் அடுத்தவர் பொறாமை படும் அளவிற்கு.