உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மேகமலைக்கு டூவீலர்களில் வலம் வரும் காதல் ஜோடிகள் சோதனைச்சாவடியில் விசாரிக்க வலியுறுத்தல்

 மேகமலைக்கு டூவீலர்களில் வலம் வரும் காதல் ஜோடிகள் சோதனைச்சாவடியில் விசாரிக்க வலியுறுத்தல்

கம்பம்: மேகமலை பகுதியில் டூவீலர்களில் காதல் ஜோடிகள் வலம் வருகின்றனர். ஆள் அரவமற்ற இடங்களில் வன உயிரினங்களின் ஆபத்தை உணராமல் அமர்ந்து மணிக் கணக்கில் பேசி வருகின்றனர். சுற்றுலா தலமான மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணை பகுதிகள் மிகவும் ரம்மியமாக இருக்கும். வாகனங்களில் சென்று கொண்டே அதன் அழகை ரசிக்கலாம். தேயிலை தோட்டங்களும், வன உயிரின நடமாட்டமும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும். தூவானம் பகுதி, மகாராஜா மெட்டு பகுதிகளில் இருந்து பார்த்தால் கம்பம் பள்ளத்தாக்கை முழுமையாக பார்க்கலாம். எனவே தினமும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் உள்ளது. சமீபமாக இப் பகுதிக்கு காதல் ஜோடிகள் டூவீலர்களில் ஆபத்தை உணராமல் மலை ரோட்டில் அதிவேகமாக செல்கின்றனர். ஆள் அரவமற்ற வனப்பகுதிக்குள் அமர்ந்து பேசுகின்றனர். மணிக்கணக்கில் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து அரட்டை அடிக்கின்றனர். தவறான செயல்களும் நடைபெறுகிறது . ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனை சாவடியில் அவர்களிடம் முறையாக விசாரணை நடத்தி, அடையாள அட்டைகளை சரி பார்த்து அனுப்ப வேண்டும். போலீசாரும் கவனம் செலுத்த வேண்டும். கோவை சம்பவம் போன்று அசம்பாவிதம் நடந்த பின் பேசுவதை விட, நடக்காததற்கு முன்னரே தடுப்பது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி