| ADDED : நவ 16, 2025 04:28 AM
கம்பம்: வாலிபால், எறிபந்து, பூப்பந்து போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிகளில் விளையாட கம்பம் சி.பி. யூ. மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட குழு விளையாட்டு போட்டிகள் கடந்த வாரம் நடந்தது. ராயப்பன்பட்டியில் நடந்த 19 வயதுக்குட்பட்ட எறிபந்து போட்டியில் 16 அணிகள் மோதியது. இறுதி போட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியும், கம்பம் சிபியூ மேல்நிலைப்பள்ளியும் மோதின. இதில் சிபியூ மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. 19 வயது பூப்பந்து போட்டிகள் போடியில் நடந்தது.இதில் 16 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் தேனி மேரி மாதா மெட்ரிக் பள்ளியும், கம்பம் சிபியூ மேல்நிலைப் பள்ளியும் மோதியது. இதில் சிபியூ மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. 17 வயது வாலிபால் போட்டிகள் தேனியில் நடந்தது. இறுதி போட்டியில் பெரியகுளம் வள்ளி வரதராஜ் மெட்ரிக பள்ளியும், சிபியூ மேல்நிலைப்பள்ளியும் - மோதியதில் சிபியூ மேல் நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. பீச் வாலிபால் கம்பத்தில் நடந்தது. ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளியும், சிபியூ மேல்நிலை பள்ளியும் மோதியதில், சிபியூ மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற 11 பிரிவுகளில் மாநில போட்டிகளில் விளையாட கம்பம் சிபியூ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் திருமலை சுதாகர் , பொருளாளர் ராமசாமி, தலைமையாசிரியர் சையது அப்தாகிர் ஆகியோர் பாராட்டினார்கள். பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் ஆசிக் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராதா கிருணன்ஆகியோரையும் பாராட்டினார்கள்.