உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓடைப்பாலம் தடுப்புச்சுவர் சேதம்

ஓடைப்பாலம் தடுப்புச்சுவர் சேதம்

தேவாரம்: தேவாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு தெற்கு தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தெற்கு தெரு மெயின் ரோடு, ரேஷன் கடை, சார்பதிவாளர் அலுவலகம், உழவர் சந்தை, பேரூராட்சி அலுவலகம், தினசரி காய்கறி சந்தை, தோட்டங்களுக்கு செல்லும் முக்கிய பாதையாக அமைந்து உள்ளது.இந்த ரோட்டில் உள்ள பெரிய ஓடைப் பாலத்தின் அடிப்பகுதி முழுவதும் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து இருபுறமும் தடுப்புச் சுவர் இன்றி உள்ளது.பல ஆண்டுகள் ஆகியும் பாலம் சீரமைக்காததால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இரவில் மின்தடை ஏற்படும் போது தடுப்புச்சுவர் இல்லாததது தெரியாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். அசம்பகாவிதம் ஏற்படும் முன் சேதம் அடைந்த பெரிய பாலத்தை சீரமைப்பதோடு, இருபுறமும் தடுப்புச் சுவர் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ