உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவதானப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கற்கள் சேதத்தால் விபத்து அபாயம்

தேவதானப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கற்கள் சேதத்தால் விபத்து அபாயம்

பெரியகுளம்: தேவதானப்பட்டி முதல் மதுராபுரி வரை 18 கி.மீ., தூரம் பைபாஸ் ரோட்டில் 7 இடங்களில் தடுப்பு கற்கள் விழுந்து சேதமடைந்துள்ளது.தேனி மாவட்டம் வழியாக திண்டுக்கல் -குமுளி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேவதானப்பட்டி முதல் மதுராபுரி வரை பைபாஸ் ரோடு 18 கி.மீ., தூர பகுதியில் விபத்துக்கள் அதிகளவில் நடக்கிறது. இப்பகுதியில் இடது மற்றும் வலது ஓரம் 10 மீட்டர் இடைவேளையில் தடுப்புக்கல் ஊன்றப்பட்டுள்ளது. இதில் டி.கள்ளிப்பட்டி கிராம சாலை பைபாஸ் ரோடு இணைப்பு, சருத்துப்பட்டி ஜல்லிபட்டி பைபாஸ் ரோடு இணைப்பு உள்ளிட்ட 7 இடங்களில் நடந்த விபத்தில் பல மாதங்களாக ஆங்காங்கே தடுப்பு கற்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. இதனால் ரோட்டின் ஓரம் செல்லும் வாகனங்கள் தடுப்புக்கல்லை உரசிச் செல்லும் நிலை உள்ளது. மேலும் சாய்ந்து கிடக்கும் தடுப்பு கற்களை நிமிர்த்தி வைக்காததால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் பல்வேறு வாகனங்கள் பள்ளத்தில் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை