நீரோடையின் மையத்தில் மின் கம்பங்களால் அபாயம்
கூடலுார் : லோயர்கேம்பில் இருந்து கூடலுார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் நீர்வரத்து ஓடை உள்ளது. மழைக்காலங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் முழுவதும் இந்த ஓடை வழியாக வெளியேறி முல்லைப் பெரியாற்றில் கலக்கும். ஓடையின் நடுவே ஏராளமான மின்கம்பங்களும் மின் டிரான்ஸ்பாரமும் அமைக்கப்பட்டுள்ளன. கனமழை பெய்யும் போது ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தால் மின்கம்பங்கள் சாயும் அபாயம் உள்ளது. அதனால் மின்வாரியத் துறையினர் உடனடியாக இதை மாற்றி அமைக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.