உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் மதுராபுரி விலக்கில் விபத்து அபாயம்

உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் மதுராபுரி விலக்கில் விபத்து அபாயம்

தேனி: திண்டுக்கல் - குமுளி பைபாஸ் ரோடு தேனி அருகே மதுராபுரி விலக்கில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக எரியததால் இருள் சூழ்ந்து விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.பைபாஸ் ரோட்டில் மதுராபுரி விலக்கு முக்கிய சந்திப்பாகும். இப்பகுதியில் மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையுடன் சந்திக்கிறது. தேனி நகர்பகுதியின் நுழைவாயிலாக இப்பகுதி உள்ளது. திண்டுக்கல் வழியாக கம்பம், குமுளி, மூணாறு, சபரிமலை செல்லும் வாகனங்கள் இவ்வழியாக அதிகளவில் செல்கின்றன. ஆனால், மதுராபுரி ரவுண்டானாவில் பொருத்தப்பட்டுள்ள உயர்மின்கோரபு விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் காட்சி பொருளாக உள்ளதால், அப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. ஏற்கனவே இந்த இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து அதிக உயிர் பலி ஏற்பட்டுள்ளது. மேலும் சிக்னல்களும் முறையாக எரிவதில்லை.இதனால் டூவீலர் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ரோட்டை கடந்து செல்லும் சூழல் உள்ளது. தொடர் விபத்துக்கள் நடக்கும் இப்பகுதில் உயர்மின்கோரபுர விளக்கு எரிவதை உறுதி செய்யவும், ரோட்டோரங்களில் ரிப்ளக்டர்கள் வைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி