கொலை மிரட்டல்: ஆறு பேர் மீது வழக்கு
போடி: போடி அருகே முத்தையன்செட்டிபட்டி மேற்கு தெருவில் வசிப்பவர் சிலேந்திரன் 50. இவர் நேற்று நாகலாபுரம் விலக்கில் தனது உறவினருடன் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது போடி கெஞ்சம்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி 38, தனசெல்வம் 37, கோபி, சஞ்சய், ஜெகதீசன், கருணாகரன் ஆகியோர் மது போதையில் தகாத வார்த்தையால் பேசி பாட்டிலை எடுத்து உடைத்து உள்ளனர். இதனை சிலேந்திரன், உறவினர் மகாதேவன் தட்டிக் கேட்டுள்ளனர். ஆத்திரம் அடைந்த தங்கப்பாண்டி, கோபி உட்பட ஆறு பேரும் சேர்ந்து சிலேந்திரன், மகாதேவனை பிளாஸ்டிக் சேரால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். சிலேந்திரன் புகாரில் போடி தாலுகா போலீசார் தங்கப்பாண்டி, கோபி உட்பட ஆறு பேர் மீது விசாரிக்கின்றனர்.