உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வள்ளக்கடவு ரோட்டில் வாகனம் மோதி மான் பலி

வள்ளக்கடவு ரோட்டில் வாகனம் மோதி மான் பலி

கூடலுார் : வண்டிப்பெரியாறு வள்ளக்கடவு ரோட்டில் வாகனம் மோதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மானை, சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியானது.கேரளா வண்டிப்பெரியாறு வள்ளக்கடவு ரோட்டில் கடக்க முயன்ற மானை சுற்றுலா வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் அருகில் உள்ள வள்ளக்கடவு வனத்துறையிடம் தகவல் கொடுத்தனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு செல்ல வனத்துறையினர் வரவில்லை. தாமதம் ஏற்பட்டதால் மான் பலியானது. அதன்பின் மவுண்டில் இருந்து வனக்காவலர்கள் வந்து மானின் உடலை எடுத்துச் சென்றனர். வனவிலங்குகள் பல இடங்களில் ரோட்டை கடக்கும் வாய்ப்புள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை