மேலும் செய்திகள்
ஆட்டுச்சந்தைக்கு கொட்டகை அமைக்க வலியுறுத்தல்
15-Jun-2025
அடுத்த வாரம் துவங்க உள்ள ஆடி பண்டிகையில் அசைவ உணவாக ஆட்டுக்கறி முக்கிய இடம் பிடிக்கும். ஆடி துவக்கத்தை புதுமண தம்பதிகள் முதல் ஆடியாகவும், ஆடி கடைசி வாரத்தில் கடைசி ஆடியாகவும் கொண்டாடி மகிழ்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் ஆடி துவக்கத்திலும் இறுதியிலும் அசைவ உணவே இடம்பெறும். இதனால் ஆடுகளுக்கான தேவை அதிகமாகும். இறைச்சி கடைகளில் வழக்கமான விற்பனையை விட ஆடி பண்டிகையில் விற்பனை பல மடங்காகும்.ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துடன் ஆடு வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. கிராமங்களில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, தைப்பொங்கல், ஆடி மாதங்களில் கிராக்கியுடன் விற்பனையாகும். ஆடி பண்டிகையை கணக்கில் கொண்டு வியாபாரிகள் பலரும் ஆடு வளர்ப்பவர்களிடம் முன்கூட்டியே ஆடுகளை வாங்குவதற்கு புக்கிங் செய்துள்ளனர். தற்போதுள்ள ஆடுகளின் எண்ணிக்கை உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யாது என்பதால் வெளியூர்களில் இருந்து ஆடுகளை கொண்டு வர வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.ஆட்டு வியாபாரி முத்தனம்பட்டி சின்னக்காளை கூறியதாவது:மாவட்டத்தில் ஆண்டிபட்டி தாலுகாவில் தான் அதிக வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. ஆண்டிபட்டி, சின்னமனுாரில் ஒவ்வொரு வாரமும் ஆட்டுச் சந்தை நடைபெறும். பண்டிகை காலங்களில் வெளியூர் வியாபாரிகளும் அதிகம் வந்து ஆடுகளை வாங்கி செல்வர். தேவையை கணக்கில் கொண்டு வியாபாரிகள் சென்னை வேப்பூர், கரூர் தொட்டியம், செஞ்சி பகுதிகளிலிருந்து மேய்ச்சல் ஆடுகளை வாங்கி வருகின்றனர். பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடுகளை கர்நாடகாவில் இருந்து வாங்கி வருகின்றனர். மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வளர்க்கப்படும் ஆடுகளை விட பண்ணை ஆடுகள் விலை குறைவு. பண்ணை ஆடுகளின் மாமிசமும் சுவை குறைவாகவே இருக்கும். பண்ணை ஆடுகளை வாங்கி வந்து ஒரு வாரத்தில் மாமிசமாக பயன்படுத்தி விட வேண்டும். அங்கிருந்து வரும் ஆடுகள் ஒரு வாரத்திற்கு மேல் இங்குள்ள தட்பவெப்ப நிலையை தாங்குவதில்லை. வெளியூர்களிலிருந்து தேனி மாவட்டத்திற்கு வாரம் ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை 3 முதல் 4 மடங்கு வரை உயர்கிறது. மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படும் வளர்ப்பு ஆடுகள் கிலோ ரூ.700 வரையும், பண்ணையில் வளர்க்கப்படும் ஆடுகள் கிலோ ரூ.500 முதல் 600 வரையும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அடுத்த வாரம் ஆடி பண்டிகை துவக்கத்தை முன்னிட்டு வியாபாரிகள் தற்போது வளர்ப்பு ஆடுகளை தேடி ஊர் ஊராக செல்கின்றனர் என்றார்.
15-Jun-2025