உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆர்ப்பாட்டம்: 33 பேர் கைது

ஆர்ப்பாட்டம்: 33 பேர் கைது

தேனி : பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது வினியோகத் திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பணியாளர் சங்கத்தினர் தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்டத் தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் காமாட்சிமுருகேசன், ரேஷன்கடை பணியாளர் சங்க மாநில செயலாளர் பாண்டி, மாவட்டச் செயலாளர் அய்யனார், பொருளாளர் முத்துராயர், அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்நது ரோடு மறியலில் ஈடுபட முயன்ற சங்கத்தினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ