பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்
போடி : போடி அருகே தர்மத்துப்பட்டியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தவும், சங்கங்களில் பணிபுரியும் பணியாளருக்கு பணி பாதுகாப்பு, சம்பள உயர்வு, குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தில் பால், அதனை சார்ந்த பொருட்கள் வழங்கவும், 50 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் வெண்மணி சந்திரன், மாவட்ட தலைவர் ஜெயக்குமார், செயலாளர் செல்வராஜ், விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜப்பன், பாண்டியன், மனோகரன், மொக்கச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.