ஆர்ப்பாட்டம்
தேனி:தேனியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பணி நிரந்தரம், காலமுறை சம்பள உயர்வு, அரசு பணியாளர்களுக்கு இணையாக சலுகைகள் வழங்க வலியுறுத்தியும், மதுவிற்பனையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க மாவட்ட தலைவர் சங்கர் ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுரேஸ், செல்வம், சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.