மேலும் செய்திகள்
கேரளா துணை கலெக்டர் தற்கொலை!
15-Oct-2024
மூணாறு : கண்ணூர் துணை கலெக்டர் நவீன்பாபு தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து, மூணாறில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஊர்வலமும், தர்ணா போராட்டமும் நடந்தது.கேரளா, கண்ணூர் மாவட்ட துணை கலெக்டர் நவீன்பாபு அக்.15ல் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணமான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கேரள அரசை கண்டித்தும் மூணாறில் காங்கிரஸ் தேவிகுளம் ஒன்றிய குழு தலைமையில் கண்டன ஊர்வலமும், தர்ணா போராட்டமும் நடந்தது.ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. மணி துவக்கி வைத்தார். ஐ.என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், காங்., மண்டல தலைவர்கள் நெல்சன், பவுன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
15-Oct-2024