உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வடமலைநாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்

வடமலைநாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்

போடி : போடி அருகே வடமலைநாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது வடமலைநாச்சியம்மன் கோயில். இக்கோயில் 650 ஆண்டுகளுக்கு முன்பு கண் கொடுத்த ராசு நாயக்கர் காலத்தில் உருவானது. போடியில் இருந்து 7 கி.மீ., மீட்டர் தூரம் ரோடு வசதியும், 2 கி.மீ., தூரம் மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான இக்கோயிலில் வாரம் தோறும் வெள்ளி, மாதந்தோறும் பவுர்ணமி பூஜைகள் நடப்பது வழக்கம். துவக்கத்தில் பாதை வசதி இல்லாமல் இருந்தது. வெளியூரில் இருந்து பக்தர்கள் வருகை அதிகமானது. இதனால் கோயில் நிர்வாகம் விவசாயிகள் இணைந்து பாதையின் இரு புறமும் ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றி 2 கி.மீ., தூரம் ரோடுக்கான பாதை வசதியை ஏற்படுத்தினர்.தற்போது ரோடு குண்டும், குழியுமாக மண் பாதையாக உள்ளதால் பக்தர்கள் நடந்த செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். ரோடு வசதி செய்து தரக் கோரி பக்தர்கள், அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.பக்தர்கள், விவசாயிகள் பயன் பெறும் வகையில் வடமலைநாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி ஏற்படுத்தி தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !